நாகர்கோவில் பிப் 14
கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மகளிருக்கு இலவச பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண்திட்டம், எதிர்கால இளைஞர்களுக்கென தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம். மக்களுடன் முதல்வர். மக்களைத்தேடி மருத்துவம், உங்கள் தேடி உங்கள் ஊரில், தமிழ்புதல்வன் திட்டம், கலைஞர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு. புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்புதல்வன் திட்ட மாணவ பயனாளிகளிடம் இத்திட்டம் தொடர்பான பயன்கள் குறித்தும், கல்வி உதவித்தொகையினை நல்ல முறையில் கையாளுகிறார்களா. இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டறியப்பட்டது.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள மாணவர்களிடம் உதவித்தொகையை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு மாணவர்கள் முயல வேண்டுமென்றும் கட்டாயமாக கல்லூரி படிப்பு முடிவதற்கு முன்பு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்றும் அரசினால் செயல்படும் திறன்வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு பிற்காலத்திற்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள மாணவிகளிடம் புதுமைப்பெண் திட்டம் சார்ந்த தகவல்களை கேட்டறிந்ததோடு, பெண்கள் அரசினால் கிடைக்கும் உதவித்தொகையின் மூலம் தன் திறமையை மேம்படுத்த வேண்டுமென்றும் பெண்கள் எதிர்காலத்தில் தன்னிச்சையாக நின்று யாருடைய உதவியையும் நாடாமல் தனித்தன்மையுடன் நிற்க வேண்டும் எனவும். ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பம் செழிப்பாகும். அதேபோல் பெண் வேலைக்கு சென்றால் ஒரு தலைமுறையே செழிக்கும் என்றும் மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் Web Developer Course நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.