சங்கரன்கோவில். ஜூன்.2.
திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திமுக மாவட்டச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள் ,தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் நடந்தது . இக்கூட்டத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர் இளங்கோ, எம்பி வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதனை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பெரியதுரை, பால்ராஜ், ராமச்சந்திரன், நகரச் செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ், சார்பு அணி அமைப்பாளர்கள் சிறுபான்மையினர் அணி நாகூர் கனி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி கிப்ட்சன், பார்வேர்டு பிளாக் கட்சி சுப்பிரமணியன் மற்றும் திமுக மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.