சென்னை, ஜூலை – 28, ராஜரிஷி ஸ்ரீ குரு அர்த்தநாரீச வர்மா 150 வது பிறந்தநாள் விழா மற்றும் ஆகஸ்ட் 21 இல் சென்னப்ப நாயக்கரின் பிறந்தநாளை சென்னை தினமாக ஆண்டுதோறும் விழா எடுக்க குழு அமைக்கும் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் கட்டுமான நல வாரிய தலைவரும் சமூக நீதி சத்திரிய பேரவை தலைவருமான பொன். குமார் கலந்து கொண்டு ராஜரிஷி ஸ்ரீ குரு அர்த்தனாரிச வர்மா திரவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
பின்பு சென்னப்ப நாயக்கரின் பிறந்த நாளை சென்னை தினமாக விழா எடுத்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். பேரவையின் ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் எஸ். எஸ் .பி .சசிகுமார் தலைமையில் தொகுதி தலைவர்கள் அண்ணா நகர் பூமிநாதன், வில்லிவாக்கம் சுரேஷ்குமார், புலி கதிர்வேல் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நீதி சத்திரியப் பேரவையின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ். எம் ,குமார், மாநிலத் துணைத் தலைவர் வி .வீரா, எல் & டி பொதுமேலாளர் மோகன்ராஜ் சத்ரிய வம்சம் இதழின் ஆசிரியர் சி .சுப்பிரமணியன் பி.டி.லீ.செங்கல்வராய அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் எம். விஜயசுந்தரம், ராயபுரம் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தளபதி பாஸ்கர், எம் .சீனிவாசன்,காங்கை குமார், துறைமுகம் ரவிராஜ் ஆர் .கே. சுவாமி, எம். ஜி .கண்ணன்,ஆர் .குணசேகரன், அஜித் குமார், கே. செந்தில்குமார், கல்விக்குழு அமைப்பாளர் ஜி .செல்வராஜ்.அரசு ஊழியர் அணி அமைப்பாளர் டி. கே .மூர்த்தி, வர்த்தக அணி செயலாளர் கன்னியப்பன், கலைத்துறை அணியின் தலைவர் பூங்கா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தலைவர் பொன்.குமார் தெரிவித்ததாவது:-
போர்ச்சுகீசியர் பழவேற்காட்டை துறைமுகமாக பயன்படுத்தி அப்பகுதியை கோலோச்சி வந்த நிலையில் ஆங்கிலேயர்கள்வணிகம் செய்ய ஏதுவாக இன்றைய சென்னை துறைமுகமும், ஒரு கோட்டையை நிர்மாணிக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.
இப்பகுதி சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளான தாமல் சகோதரர்களுக்கு சொந்தமாக இருந்தது. அவர்களிடம் அந்த இடத்தை வாங்கி துறைமுகம், கோட்டை நிர்மாணித்த போது இந்த பகுதிக்கு தாமல் சகோதார்களின் தந்தையான சென்னப்ப நாயக்கர் நினைவாக அவரது பெயரை வைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களிடம் கேட்டு கொண்டதின் பேரில் அதற்கு ஒப்புக்கொண்டு சென்னப்பட்டினம் என்று பெயரை வைத்தனர். அது நாளடைவில் சென்னையாக யாக மாறியது.
கடந்த தலைமுறை வரை வரலாற்று திரிபுகளால் சென்னை என்ற பெயரை சொந்தம் கொண்டாடி வந்த வேறொரு சமூகத்தினருக்கு சென்னை தோற்றத்திற்கான ஆதாரமாக விளங்க கூடிய கல்வெட்டுகளை கண்டறியப்பட்ட பின்பு வன்னிய குல சத்திரியர் சமூகத்தை சேர்ந்தவர்தான் சென்னப்பநாயகர் என்று நிருபணமாக்கப்பட்டது.
இச்சிறப்பு மிக்க வரலாற்று நாயகருக்கு இனி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ஆம் தேதி விழா எடுக்க சமூக நீதி சத்திரிய பேரவை சார்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்