கன்னியாகுமரி அக் 22
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு இன்றி காணப்பட்டும் இந்த பயணிகள் நிழற்குடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேரூராட்சி நிதி மூலமாக வர்ணம் பூசப்பட்டது . இந்நிலையில் தனியார் தங்கும் விடுதியின் விளம்பர பதாகை பயணிகள் நிழற்குடையின் மேல் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி பேரூராட்சி 15 ம் வார்டு திமுக கவுன்சிலர் பூலோகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.