தஞ்சாவூர் ஜூன் 27
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் இலக்கியத் துறையில் நடைபெற்ற முதுநிலை பட்டப்படிப்பு க்கான முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவ மாணவியர்கள் சேர்க்கப் பட்டனர்.
இப்பல்கலைக் கழகத்தில் உள்ள இலக்கியத்துறை முதுநிலை பட்டப்படிப்பில் 100 மாணவ மாண வியர்கள் சேர்க்கப்படுவர். இதில் 2024 – 25ஆம் கல்வி ஆண்டுக்கு முதல் கட்ட கலந்தாய்வு 111 மாணவ ர்கள் விண்ணப்பம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வில் 26 மாணவ மாணவி யர்களுக்கு துணைவேந்தர் திருவள்ளுவன் சேர்க்கை கடிதத் தை வழங்கினார். பதிவாளர் (பொ) தியாகராஜன் வாழ்த்துரையாற்றி னார்.
கலைப்புல முதன்மையரும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரு மான இளையாப்பிள்ளை பேசுகை யில் :
நிகழாண்டு முதுநிலை இலக்கிய பட்ட படிப்பில் மிகச்சிறந்த பேச்சாள ர்கள், படைப்பாளர்கள் சேர்ந்துள்ள னர் .அடுத்து இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட கலந்தாய்வுகளும் நடைபெறவுள்ளன. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மொழிப்புல முதன்மையர் கவிதா நாட்டுப் புறவியல் துறை உதவி பேராசிரியர் இளையராஜா, மொழியியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் குமார் இலக்கிய துறை உதவி பேராசிரி யர் தனலட்சுமி, சேர்க்கை பிரிவு கண்காணிப்பாளர் ரேவதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.