ஊத்தங்கரை ஏப்ரல்.3.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில்
உள்ள அதியமான் பப்ளிக் பள்ளி தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில், டெல்லியில் இருநாட்கள் நடைபெற்ற தெற்காசிய
பள்ளிகள் மாநாட்டில், இந்தியா, நேபாளம் இலங்கை, பூட்டான். பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளை சேர்ந்த சுமார் 1000 கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்..
உலக மாற்றத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியையும், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற மாநாட்டில், கேம்பிரிட்ஜ் கல்வி குழுவினர் தெற்காசியாவில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில். அப்பள்ளியின் கல்வித்திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் அங்கிகார விருதுகளை வழங்கினர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி ஒருகிணைந்த கற்றலுக்கான விருதினை பெற்றது. இது குறித்த தகவலை ஊத்தங்கரையில் அப்பள்ளியின் நிறுவனர் சீனி திருமால் முருகன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.