வேலூர்_08
வேலூர் மாவட்டம் ,அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் காசி பைரவர் பீடம் ஆதி வராஹி ஆலயத்தில் ஆடிப்பூரம் விழாவினையொட்டி நடைபெற்ற சுமங்கலி பூஜையில் அம்மனுக்கு அபிஷேகமும் ,ஆராதனையும், சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் சத்யநாராயணன் , குருஜி செல்வராஜ், ஆலய நிர்வாகிகள் சாது லட்சுமி அம்மாள், கஜேஸ்வரி ஜெகதீசன், மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.