மதுரை ஜூன் 22,
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
மதுரை மாவட்டம் அருள்மிகு அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 1434ம் பசலி 2024 ம் ஆண்டு ஆடிப்பெருந்திருவிழா வருகின்ற 12.07.2024 முதல் 23.07.2024 வரை நடைபெறவுள்ளது. இதில் 13.07.2024ம் தேதியன்று ஆனி 29 சனிக்கிழமை காலை 07.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 17.07.2024ம் தேதியன்று ஆடி 1 புதன்கிழமை காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு கள்ளழகர் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 20.07.2024ம் தேதியன்று ஆடி 4 சனிக்கிழமை அன்று 8ம் அருள்மிகு பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும்
திருநாள் இரவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 21.07.2024ம் காலை 6.45 மணிக்கு தேதியன்று ஆடி 5 ஞாயிற்றுக்கிழமை அன்று 9ம் திருநாள் மேல் 7.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 23.07.2024ம் தேதியன்று ஆடி 7 செவ்வாய்க்கிழமை அன்று உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடையும் மேலும்
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அழகர்கோவிலில், அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோயிவிலின் திருக்கதவுகள் ஒவ்வொரு வருடமும் ஆடி பௌர்ணமி அன்று மாலை திறக்கப்பட்டு அங்குள்ள பதினெட்டு படிகளுக்கும் பூஜை செய்து தீபாராதனை நடைபெற்று மீண்டும் கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடியாவது வழக்கம். அதுபோலவே இந்த ஆண்டும் பசலி 15 1434 ல் 21.07.2024 (ஆடி 5 ம் நாள்)
ஞாயிற்றுக்கிழமை, ஆடிப்பௌர்ணமி அன்று மாலை பதினெட்டாம்படி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜை மற்றும் தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெறும். 04.08.2024ம் தேதியன்று ஆடி 19 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அருள்மிகு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.