நாகர்கோவில் செப் 16
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர் எனவே குமரி மாவட்டத்தில் திரு ஓண பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுவதைப் போல மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது . கேரளா பாரம்பரிய படி பெண்கள் ஆடைகள் அணிந்து கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடுகள் சிறப்பு தரிசனங்கள் பெற்றனர். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திருவோண பண்டிகையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு பால், பண்ணீர், இளநீர், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டு வழிபாடு, மகாதீபாரனை. 54 பேர்களுக்கு ஆடை தாணம், 207 பேர்களுக்கு எழுதுகோல்கள் சித்தர் பீட தலைவர் சின்னதம்பி வழங்கினார். பெண்கள் கேரளா பாரம்பரிய ஆடைகள் அணிந்து அத்தப்பூ கோலமிட்டு அன்ன விளக்கு முன் நெல் பரை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது . அதனை தொடர்ந்து ஒண பாயாசம், அன்னதானம், அருள்பிரசாதம் பத்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவிலில் நடைபெற்ற கூட்டு பிரார்தனையில் வயநாட்டில் ஏற்பட்டது போன்று பேரிடர் உயரிழப்புகள் எதுவும் இனிமேல் ஏற்படாமல் மக்கள் மகிழ்சியாக வாழ வேண்டி பிராந்தனை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .