தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல்,திருத்தல்
சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி
பார்வையிட்டார். மேலும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். உடன் தருமபுரி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர் .