கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு
போகலூர், நவ.17-
ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்ட் குடியிருப்போர் உரிமையாளர் நலச்சங்க மெட்ரிக் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி 2025 ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாலா கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயரை சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் நடைபெறுகின்றன. இம் முகாமில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் திருத்தம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தவறாமல் முகாமில் பங்கேற்று விண்ணப்பங்களை வழங்கிட வேண்டும் அதேபோல் திருத்தம் நீக்கம் குறித்து விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பித்து சரி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.