நாகர்கோவில் அக் 19
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, தலைமையில், நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களிடையே பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருளற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான சமுதாயம் அமைந்திடவும். சமூகத்தில் கல்வியையும். விழிப்புணர்வையும் வழங்கி போதைப்பொருள் பழக்கத்திற்கு யாரும் அடிமையாகாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியதன் அடிப்படையில் பள்ளிகள். கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நாகர்கோவில் எஸ்.எல்.மி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்நிகழ்ச்சியில் போதைப்பொருட்களின் தன்மைகள், அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இக்குறும்படத்தை பற்றிய கருத்துக்கள் மாணவர்களிடையே கேட்டறியப்பட்டது. ஆசிரியர்கள் போதைப்பொருள்கள் உபயோகிப்பதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். எனவே மாணவர்களாகிய உங்களிடம் யாரேனும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒருமுறை உபயோகித்து பார்க்க சொல்லித்தந்தாலும், உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இக்குறும்படத்தினை நினைவில் கொண்டு, அவற்றினை உபயோகப்படுத்தாமல், இது போன்ற தவறான நபர்களிடமிருந்து உங்களை நற்காத்து கொள்ள வேண்டும்.
உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளமாக உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடினமாக உள்ள பாடத்தை நன்றாக படித்து, அதற்கான கவனத்தை செலுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும். நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போது அங்கும் இதுபோன்ற கும்பல்கள் உங்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல முற்படுவார்கள். அப்போது நீங்கள் இப்போதை பழக்கத்திற்கு அடிமையகமால் உங்களுடைய இலட்சிய சிந்தனையை மனதில் நினைவு கூர்ந்து, அதற்கான முயற்சிகளையும் எதிர்காலத்தை நல்ல விதமாக அமைக்கும் சிந்தனையில் உறுதியாக இருந்தால் இதுபோன்ற தவறான பழக்கத்திற்கு ஆளாக மாட்பர்கள்.
நீங்கள் சமூகத்தில் உயர்ந்த பணிகள். பதவிகளை பெற்று உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை 27 வயதுக்குள் அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள். வேலைக்கான அனைத்து வாய்ப்புகளும் அனைத்து பகுதிகளிலும் உள்ளன. உங்களுடைய குறிக்கோள் அடையவதற்கு இதுபோன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் மனவுறுதியுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையாசிரியர். மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.