மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான. இவர் ரஜினிகாந்த் தன்னை அழைத்து நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரஜினிகாந்துக்கு 3 அடி உயர கற்சிலை வைத்து ஒன்றரை அடி உயர கழுகு சிலை வைத்து கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடப்பது போன்று தினசரி வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பூரண குணம் பெற வேண்டும் எனவும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பது போன்று ரஜினி கோவிலில் ரஜினிகாந்த் நடித்த அத்தனை திரைப்படங்களின் படங்களையும் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.அந்த வகையில் அபூர்வ ராகங்கள் முதல் விரைவில் வெளிவர உள்ள கூலி திரைப்படம் வரை ரஜினி நடித்த படங்களின் புகைப்படங்கள் அனைத்தையும் வில் வைத்து காலை மாலை என இரு வேலைகள் பூஜை நடத்தி வருகிறார் மேலும் பூஜையில் பிரசாதங்கள் வைத்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு தினம் தோறும் வழங்கிவருகிறார்.கோவில்களில் சுவாமி சிலைகள் தலைவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவ பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம் ஆனால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் ரஜினி புகைப்படங்களை வைத்து நவராத்திரி விழா கொண்டாடி வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளரிடம் தெரிவித்த கார்த்திக் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்காக சிலை வடித்து தினந்தோறும் பூஜை செய்து வரும் நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக கொலு வைத்து சிறப்பு வழிபாடு செய்தேன் அதன் காரணமாக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டார் அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.என்று கூறினார்.