நாகர்கோவில் – ஜூன் – 16
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அதிமுக வை சசிகலா தலைமையேற்க்கவேண்டி 100 – க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம் நடத்தப்பட்டது . வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பால் அபிஷேகங்களை செய்து வேண்டி வழிப்பட்டனர்.
நடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் . கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 10 க்கும் மேற்பட்ட தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி நிலையே ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட ஒட்டு வங்கி சதவிகிதம் அதிகம் கொண்ட கட்சி என்ற பெருமை பெற்ற அதிமுகவின் இன்றைய நிலை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்து உள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் அதிமுக விற்கு புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் அவர் கட்சி தொண்டர்களை வழிநடத்த முன் வர வேண்டும் என முடிவு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு நாகராஜா கோவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்த வழிபாடு நிகழ்சியில் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர்.