நாகர்கோவில் டிச 1
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு தொடக்க பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பழமையான இந்தப் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டி 70 ஆண்டுகளை கடந்த நிலையில் கட்டடங்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக நிலையில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள்,பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு நேரடியாக சென்று கட்டிடங்களை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது குறித்து ஆய்வு செய்தார். மேலும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகள் துவங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார் இந்த ஆய்வின்போது பா.ஜ.க கவுன்சிலர் ரோசிட்டால் திருமால், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.