தருமபுரி மாவட்டத்தில்
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை
கலெக்டர் சாந்தி தகவல்
தருமபுரி , ஆக. 11-
தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
கருத்தரங்கம்
தருமபுரி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் சார்பில் எதிர்கால தொழில் நுண்ணுறிவு தொழில்நுட்பம் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் தர்மபுரி ஜோதி மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்க தலைவர் வெங்கடேஷ் பாபு, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் வரவேற்று பேசினார்.