தஞ்சாவூர் ஜூன். 3.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் ரெட் கிராஸ் ஆகியவை சார்பில் தஞ்சை அழகிகுளத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத் தை முன்னிட்டு புகையிலை எதிர்ப் பு உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இதற்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் தலைமை தாங்கி னார் .இதில் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டு புகையிலை எதிர்ப்பு உறுதி மொழியை ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் குமார், புகையிலை எதிர்ப்பு குறித்தும், நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் ,தென்மேற்கு பருவமழை யும் முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து சிக்கி தவிக்கும் மக்களையும் ஏரிகளில் மூழ்கி உயிருக்கு போராடுபவர்க ளை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மூலம் தஞ்சை அழகி குளத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் பொருள்களான குடம், பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் கேன்கள், வாழைமட்டைகள், டயர் கள், மரக்கட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி நீர் நிலைகளில் எதிர் பாராத வகையில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மிகவும் முக்கியமான உயிர் மீட்பு சுவாசம் மற்றும் உயிர்காக்கும் முதல் உதவியை எவ்வாறு செய்வ து குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட உதவி அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர் கணேசன், ரெட் கிராஸ் மாவட்ட துணை தலைவர் பொறி யாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக்நாசர், மாநகராட்சி கவுன்சிலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்