ஈரோடு ஆக 20
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் டேனரி வீதியை சேர்ந்தவர் ஞானபால் ( 60 ) தோல் தொழிற்சாலை அதிபர்
இவர் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்து உள்ளார்
அதில் கூறி இருப்பதாவது
நான் 35 ஆண்டுகளாக அன்னை பாத்திமா என்ற பெயரில் தோல் பதனிடும் ஆலை, தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், கெமிக்கல்ஸ் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன்.
விற்பனை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ராணிப்பேட்டையில் குடோன் வைத்து நடத்தி வந்தேன். கடந்த 2020 ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு 2021 ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதனால் தொழிலை முழுமையாக கவனிக்க முடியவில்லை.
என் நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகவேல் மூலம் தொழிலை நிர்வகிக்க தெரிவித்திருந்தேன்.
சிகிச்சையில் இருந்தபோது, பரமகுருவுக்கு வங்கியின் மூலம் பண பரிமாற்றம், தோல் பொருட்கள், கெமிக்கல்ஸ் என ரூ.13.29 கோடி அளவுக்கு அனுப்பி உள்ளேன்.
உடல் நலம் சீரானவுடன், கடந்த ஜனவரியில் ராணிப்பேட்டை குடோனுக்கு சென்று பார்த்தேன். அப்போது வெளிநாட்டிற்கு அனுப்ப வைத்திருந்த ஏற்றுமதி பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
பரமகுருவுக்கு தோல் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுப்பிய ரூ.1 கோடியை, பொருட்களை உற்பத்தி செய்யாமல், கோபியின் சகோதரர் மனைவி மகாலட்சுமிக்கு சொந்த உபயோகத்துக்காக ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார்.
இத்தாலிக்கு பொருள் அனுப்பும் கம்பெனிக்கு, டி.எம்.எஸ் பெயர் கொண்ட நிறுவனத்தின் சார்பில் பொருள் அனுப்பி ஏமாற்றி உள்ளனர்.
எனது நிறுவனத்தில் எனது அனுமதியின்றி எனது பணம், உற்பத்தி செய்யப்பட்ட ஷூக்கள், இருப்பு வைத்திருந்த தோல் போன்றவற்றை எனது வாடிக்கையாளர்களுக்கே டி.எம்.எஸ் பெயர் கொண்ட நிறுவனத்தின் சார்பில் அனுப்பி ரூ.2 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 851 மோசடி செய்துள்ளனர்.
என்னை ஏமாற்றி மோசடி செய்த பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர், மகாலட்சுமி, டி.எம்.எஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரித்து பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் பதிவு செய்யப்பட்ட இவர்களை கைது செய்து, தனது மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.