கரூர் மாவட்டம், மே – 23
சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த தம்பதிகள்.
கரூர் அடுத்துள்ள நெருர் வடபாகம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார் இவரது வீட்டிற்கு எதிர் புறம் வசிக்கும் ராரேஸ்வரி என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவும்.
மேலும் இங்கே குடிக்க வரும் நபர் மூலம் எனது வீட்டிற்கு ஆள் அனுப்பி நீதான் போலீசாரிடம் புகார் கொடுக்கிறாயா என்று மிரட்டுகிறார்கள். அவர்களிடம் நான் இந்தப் புகார் கொடுக்கவில்லை என தெரிவித்து ஆனால் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் என் மனைவிடம் ஐந்துக்கும் மேற்பட்டோர். வீட்டிற்கும் உள்ளே வந்தே பாட்டில் இருக்கா என்று கேட்டார்கள் மிரட்டுகிறார்கள்.
நேற்று காலையில் போலீசார் வந்து முத்துசாமியை மதுபாட்டில் -20 உடன் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் வந்து என்னிடம் நீதானே புகார் கொடுத்தாய் உன் கைகளை உடைக்காமல் விடமாட்டோம் மிரட்டினர். மேலும் உன்னையும் உன் மனைவியையும் வீடு புகுந்து அடிக்காமல் விடமாட்டோம் என மிரட்டி வருகின்றனர்.
எனது குடும்பத்திற்கு ராஜேஸ்வரியின் உறவினர்களால் ஆபத்து இருப்பதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊருக்கு செல்லாமல் எனது குடும்பத்துடன் வெளியே தங்கி உள்ளேன்.
இதில் என் குடும்பத்தினர் மட்டுமல்ல , அங்கு குடியிருக்கும் பல குடும்பத்தினரும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆகவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு காப்பாற்றும் மாறும் கேட்டுக்கொள்கிறோம் மேலும்
அந்த பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுத்துள்ளார்.