அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் தீர்ப்பு. தமிழக முதல்வருக்கு
நன்றி.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது
இந்தத் தீர்ப்பை வரவேற்று அருந்ததியர் மக்கள் நல சங்கம் நிறுவனரும் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினருமான வேடவாக்கம். சீனிவாசன் அவர்கள். தமிழக முன்னாள் முதல்வர் சமத்துவ பெரியார் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் தற்போது திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் சமூக நீதி காவலர் தமிழக முதல்வர் அவர்களுக்கு அருந்ததியர் மக்கள் நல சங்கத்தின் சார்பாகவும் அருந்ததியர்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் மிகவும் பின் தங்கிய அருந்ததியர் சமூக மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டியல் இன 18 சதவிகித ஒதுக்கீட்டில் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் சமூக மக்களுக்கு மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்டினார் இதனால் அருந்ததியர் சமூக மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஓரளவு முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் இதனை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பட்டியல் இன மக்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மூன்று சதவீத ஒதுக்கீடு அளித்தது செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது இந்தத் தீர்ப்பு பெற இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பாக வாதாடி வெற்றி பெற செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இதற்குப் பாடுபட்ட சமூக தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது இந்த அறிவிப்பினை தமிழக முதல்வர் அவர்கள் ஆறு சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது