திருப்பத்தூர்: ஆக:13, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைக்கும் நோக்கில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் போதைப் முடக்கத்தான் பலரும் பாதிப்படைகின்றனர். இதனை போக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போதை பழக்க வழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு நோக்கத்தோடு கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் நோக்கில் உறுதிமொழி ஏற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் வழிகாட்டுதலில் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் வழிகாட்டுதலோடு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்விற்கு திருப்பத்தூர் துணை வட்டாட்சியர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உறுதிமொழியானது: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன், என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.