குன்னூர் மற்றும் அறுவங்காடு பகுதியில் காலநிலை மாற்றம் குறித்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 என்று திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சென்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் மற்றும் அருவங்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு நோட்டிஸ்கள் வழங்கி காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரம் நடுவது ஒன்றுதான் காலநிலை மாற்றத்தை மீட்டெடுக்கக் கூடிய ஒரு வழி என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பழ மரங்களில் லிபியா என்ற மரம் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகஉள்ளது. அதன் பழம் தக்காளி வடிவில் இருக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணி புரிகிறது. லகோட்டா என்ற பழம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதேபோல முள்சீத்தா பழ மரம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. அருங் காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சம்பத் என்ற அலுவலக உதவியாளர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும்
முள்சீத்தாப்பழம் நவீன புற்றுநோய் சிகிச்சையான
கிமோதெரபிக்கு இணையாக செயல்படுகிறது எனவும் கூறினார். இயற்கை அனைத்து நோய்களுக்கும் தேவையான மருந்துகளை பழ வடிவத்திலும் பலவகை மூலிகை வடிவத்திலும் கொடுத்துள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பேணிக்காப்பதில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இது போன்ற பல நாற்றுக்களை தேவைப்படும் பொதுமக்கள் குன்னூர் சிம்ஸ் பார்க்கில் உள்ள தமிழக அரசு பழ ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது. அங்கு சென்று தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்ற பல செய்திகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இயக்குனர் கே.ஜே. ராஜு அவர்கள் செய்து இருந்தார்.