ராமநாதபுரம், ஜுலை 28-
ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளியில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி மாணவர்கள் பேசினார்கள். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை தலைமை ஆசிரியர் இராஜு வரவேற்று பேசினார். விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாத்திமா கனி, ஆசிரியர் அன்பின் அமலன், ஜான்சிராணி மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் முகமூடி அணிந்து பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.