திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி
ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி தேர்;தல் பொறுப்பளர் கள்ளிப்பட்டி மணி பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை படைக்கும் வண்ணம் வாக்குச்சாவடி முகவர்கள் களப்பணியாற்ற வேண்டும் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், பலக்கனூத்து, புதுச்சத்திரம், நீலமலைக்கோட்டை ஊராட்சிகளைச் சேர்ந்த பேரூர் கழக தி.மு.க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ப.ராஜேஷ்பெருமாள், முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரிதமிழ்ச்செல்வன், முன்னாள் கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரிஅன்பரசு, துணைத்தலைவர் எம்.வி.ரெங்கசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காளீஸ்வரிமலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி பேசும்போது, திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுபோல வருங்கால தமிழகம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் காக்க இந்தியாவே போற்றும் அளவிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை வாட்சப் மற்றும் குறுந்தகவல் மூலம் பரப்பி வருகின்றனர். இதை முறியடிக்கவும், நமது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கவும் ஐடிவிங்; பொறுப்பாளர்கள் அனுப்பும் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் அன்றாடம் நடைபெறும் தமிழக அரசின் நிகழ்ச்சிகள் மற்றம் நலத்திட்டங்களை நீங்கள் அருகில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வார்டு செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரும் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும் என்றார். ஆத்தூர் தொகுதியின் கொடை வள்ளலாக செயல்படும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சாதனை திட்டங்கள் மற்றும் ஆத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி ஐ.டி.விங் பொறுப்பாளர்கள் கணேசன், தனிஸ்லாஸ், காமாட்சிபுரம் ஊராட்சி முன்னாள் செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றிய மாணவரணிஅமைப்பாளர் செல்வம், ஒன்றிய இளைஞரணி ரமேஷ், மாவட்;ட பிரதிநிதி இளங்கோ, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் குண்டு கண்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட பிரதிநிதி எல்லை இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஆத்தூர் தொகுதி கள்ளிப்பட்டி மணி பேச்சு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics