தர்மபுரி நெசவாளர் நகரில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஆடி மாத திருவிழா நடைபெற்றது .ஸ்ரீ பச்சையம்மனுக்கு பால் அபிஷேகமும், மகா கும்ப பூஜையும், சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பச்சையம்மன் குலதெய்வ வகையறாக்கள் மற்றும் செங்குந்தர் அறநெறி மன்றம், செங்குந்தர் மரபினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி அடுத்த பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மன் திருவிழா மற்றும் ஆடி பூரம் திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்.மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. தர்மபுரி நகரில் அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மருத வாணேஸ்வரர் திருக்கோவிலில் 48 -ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா மற்றும் ஆடி பூரம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றியும், ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு, பூ கரகழும், தீச்சிட்டி ஊர்வலம்காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோயிலிக்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் ஆடிபூரத்தை முன்னிட்டு வளைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅ ருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.