குளச்சல், மார்- 11
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை பகுதி சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (54). இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் நிஷா (28) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு உடையார் விளை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்ற பின்னர் நிஷா வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ருக்மணி மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண் நிஷாவை தேடி வருகின்றனர்.