குலசேகரம், டிச 6
திருவட்டாறு அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர் மகன் விபின் (27). இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேல அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ( 4-ம் தேதி) வீட்டில் யாரும் இல்லாத போது விபின் மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விபின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.