புதுக்கடை, ஜன- 16
புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அஜின் (28). இவர் பூக்கடை வைத்துள்ளார். மேலும் கோவில் பூசாரியாகவும் வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து தற்போது மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து கணவன் வீட்டிற்கு வந்த பின் கடந்த 5-ம் தேதி கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மறுநாள் அதிகாலை மனைவி பார்த்த போது வீட்டில் உள்ள பைக்குடன் அஜினை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தம்பி அஜித் என்பவர் அண்ணனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.