நாகர்கோவில் அக் 3
பெருந்தலைவர் காமராஜர் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் சி.ராஜன், கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஸ்ரீலிஜா, மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயாகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ரசாக், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பூங்கா கண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, கழக பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் நீலகண்டன், சுசீந்திரம் பேரூர் கழகச் செயலாளர் குமார், வேலாயுதம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.