குலசேகரம், டிச- 11
குலசேகரம், கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஜெயினி ( 35). மணிகண்டனின் அண்ணன் ஜெயச்சந்திரன் (49) என்பவர் அதிமுக பிரமுகரும், குலசேகரம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் ஜெயச்சந்திரன் இடையே வழிப்பாதை தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
நேற்று மதியம் ஜெயினி தனது மகன் அருஷ், உறவினர் மேரி ஜாய் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயச்சந்திரன் அதே பகுதியை சேர்ந்த குமார் (47) என்பவருடன் ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஜெயச்சந்திரன் ஜெயினியை கெட்ட வார்த்தைகள் பேசி அவரை அடித்து கீழே தள்ளி, எட்டி உதைத்துள்ளார்.
மேலும் இரண்டு பேரும் கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த ஜெயினி அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயினி அளித்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன், குமார் ஆகியோர் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.