தஞ்சாவூர் ஏப்ரல் 17.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரகம், நகர்புற கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளு க்கு மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது .சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு முறையாக கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்தல் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான முன் முயற்சி எடுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து சிறப்பாக செயல்படும் சமூக அமைப்புகளுக் கான மாநில அளவிலான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி விருது பெற தகுதி வாய்ந்த சமூக அமைப்புகளில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப் பிக்கும் அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர், மாவட்ட இயக்க மேலாண்மை அழகு (மகளிர் திட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் .இரண்டாம் தளம் அரை எண் 223) ஆகிய இடங்களில் விண்ணப்ப படிவம் பெற்று முறையாக பூர்த்தி செய்து தொடர்புடைய இணைப்புகளுடன் வருகிற 30-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் இயக்க மேலாண்மை அழகிற்கு சமூக அமைப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது