தொண்டியில் மக்கள் நலன் கருதி வார சந்தை அமைக்க வேண்டும்
மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு
ராமநாதபுரம், அக்.12-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் தினசரி மார்க்கெட் மட்டும் உள்ளது. ஆனால் அலுவலகம் செல்வோர் மற்றும் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி தொண்டியில் வார சந்தை அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தமிழ்நாடு முதலமைச்சர் தனி பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அவர் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் பகுதியாகும். தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. சுற்று வட்டார மக்கள் மற்றும் தொண்டி பகுதி மக்கள் தினமும் காய்கறி உள்ளிட்டவைகளை தினசரி மார்க்கட்டில் வாங்குகின்றனர். இங்கு விலையும் சற்று அதிகமாக உள்ளது. கிராம மக்கள் வார சந்தையில் பொருள்களை வாங்க திருவாடானை செல்கின்றனர். இதனால் நேரம் விரையமாவதுடன் சென்று வர கூடுதல் செலவு ஆகிறது. அதனால் தொண்டியில் வார சந்தை அமைக்க வேண்டும் என்று தமுமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி வாரச்சந்தை அமைக்க வேண்டும்.
வாரச்சந்தையில்
அனைத்து பொருள்களின் விலை மலிவாக இருக்கும். மேலும் அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்வோர் மொத்தமாக பொருள்களை வாங்க வசதியாக இருக்கும். தொண்டி பழைய போலிஸ் ஸ்டேசன் பகுதியில் சந்தை அமைக்கலாம். இது குறித்து ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நலன் கருதி தொண்டியில் வார சந்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மமகவின் சார்பில் கேட்டு கொள்கிறேன்
இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.