கன்னியாகுமரி, நவ. 29:
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சியில் குட்டி மரநாய் ஒன்று சுற்றி சுற்றி வந்தது. இதனால் பேரூராட்சி
அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் ஒருவித அச்சத்துடன் பரபரப்பாக காணப்பட்டனர். மேலும்
அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே அந்த மரனாய் பிடித்து செல்ல வேண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாயை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இதனால் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் சுமார் ஐந்து மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.