திண்டுக்கல் சின்னாளபட்டியில் சாதனை படைத்த தமிழக மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.
அஸ்ஸாம் மாநிலம், கவுகாதியில் கடந்த 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான மினி ரோல்பால் போட்டி நடைபெற்றது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 5 மாணவர்கள், 4 மாணவிகள் என ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணியும் 3 – ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
3 ஆம் பரிசு பெற்ற தமிழக வீரர் வீராங்கனைகளும் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான மாஸ்டர் எம். பிரேம்நாத், பயிற்சியாளர் தீபக், நடுவர் பிரதீப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வெற்றிக் கோப்பையுடன் . திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ரயில் நிலையம் வந்த 9 மாணவர்களையும், பயிற்சியாளர்களையும் பெற்றோர்கள் மாலை அணிவித்து சிறப்புடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.