அஞ்சு கிராமம் நவ- 7
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ லட்சுமிபுரம் அஜந்தா சிட்டியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பிளாட்டுகளை வாங்கி வீடு கட்டி வருகின்றனர். அஞ்சு கிராமம் பேரூராட்சி மூலம் வீட்டு வரி, குடிநீர் இணைப்பு வழங்கி வசூல் செய்து வருகிறது மேலும் இங்குள்ள பிரதான தெரு காங்கிரட் வசதி இன்றியும், மின்விளக்கு வசதி இல்லாமலும் காட்சி அளிக்கிறது மழை காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் சகதியாய் காணப்படுகிறது இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்,பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சில வீட்டு உரிமையாளர்கள் 13 அடி அகலம் உள்ள தெருவை சுமார் 3 அடி அகலத்திற்கு வாகன நடைபாதை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது. மேலும். டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் செல்லமுடியாமல் உள்ளது. ஆக்கிரமிப்பு நடைபாதையை மாற்றக்கோரி அஞ்சுகிராமம் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எங்கப்படவில்லை. மேலும் தெரு மக்களிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லெட்சுமிபுரம் அஜந்தா சிட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.