மதுரை ஜூன் 20,
மதுரையில் தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும் கதம்ப விழா மதுரையில் தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும் கதம்ப விழாவில் ஜிம்எஸ் பவுண்டேசன் மூலமாக வரும் ஜூன் 29 & 30 தேதிகளில் மதுரை லெட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கதம்ப விழாவின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் மீது நாம் கொண்டுள்ள பொறுப்புணர்வும் அக்கறையும் அவர்கள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கி சமூக பொது நீரோட்டத்தில் ஒன்றினைப்பதும் அவர்களுக்கான மேடையை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடையில்லை என்பதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தனித்திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்கள் ஆக்குதல் ஆகும். இவ்விழாவில் ஆட்டிஸம், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர், செவித்திறன் குறைபாடுடையோர், பார்வை மாற்றுத்திறனாளிகள் கை கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் அனைவரும் இரண்டு பிரிவுகளாக (வயது வரம்பு 13 முதல் 19 வயதினர் மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோர்) பங்கேற்க உள்ளார்கள். அவர்களுக்கு நடனம், பாட்டு இசைக்கருவிகள் கேரம், சதுரங்கம், சிறுகதை கூறுதல், புகைப்படம், காமெடி டிராக், குறும்படம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைப்பெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதகளும் வழங்கப்படும். மேலும் இவ்விழாவில் சிறப்பு அம்பசமாக பத்து சிறந்த மாற்று திறனாளி தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவானது இவ்வருடம் சுமார் 500 போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.இவ்விழாவில் ராஜகுமாரி ஜீவகன் நிறுவனர் மற்றும் (சேர்மன்)தலைவர், ஜிஎம்எஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் விஜய தர்ஷன் , ரேபா தேவி, மணிகண்டன், தியாகம் டிரஸ்ட்,
இந்தியாவின் பல்வேறு சாதனைகள், நல்லூர் “நாம்” தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்கம் குழு
இணைந்து நடத்த உள்ளார்கள்.