நாகர்கோவில் ஆக 6
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றுதான் சிலம்பாட்டம், வர்ம கலைகள் . நவீன காலத்தில் இயந்தர மயமாகி வரும் உலகில் இந்த பாரம்பரிய கலைகள் அழிந்து வருகிறது என்றே கூறலாம் இந்நிலையிலும் இது போன்ற வர்ம கலைகளை பல பகுதிகளில் புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளும் நடந்து தான் வருகிறது . அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் வர்ம களரி அடி முறை உலகக் கூட்டமைப்பு சார்பாக 2 நாட்கள் வீர விளையாட்டுகளான சிலம்பாட்டம் . சுருள் வால் வீச்சு. களரி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினார்கள். இறுதி நாளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டது . சிலம்பாட்டம் உள்ளிட்ட இந்த வீர விளையாட்டுகளை ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர். தமிழக அரசு இந்த வீர விளையாட்டுகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஆராட்சி கூடமும், ஆடிட்டோரியமும் கட்டி தர வேண்டும் என இந்த போட்டிகளின் ஒருங்கினைப்பாளர் செல்வம் கோரிக்கை விடுத்து உள்ளார்.