ராமநாதபுரம் ,பிப். 25-
ராமநாதபுரம் அரண்மனை முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமமுக சார்பில் பில் முன்னாள் எம்எல்ஏ யும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளருமான முருகன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளா டேவிட் அண்ணாதுரை மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் கபிலன், மகளிர் பிரிவு செயலாளர் ஜெஸிமா பானு இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச் செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர் ஆதங் கொத்தங்குடி சிவ இராமச்சந்திரன் வரவேற்றார். ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசியதாவது;
திமுக ஆட்சியில் அம்மாவின் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பெயரை மாற்றி புதிய திட்டம் போல செயல்படுத்துகின்றனர். அம்மா உணவகம் கேட்பாரற்ற நிலையில் உள்ளன. உண்மையான எம் ஜி ஆர் ஜெயலலிதா தொண்டர்கள் அமமுகவில்தான் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் டெண்டர் பார்ட்டிகள். பழனிசாமியின் 4 ஆண்டு ஆட்சியில் 60 – 40 என்ற அளவில் திமுகவுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தவர் கொலை. கொள்ளையில் இருந்து தப்பிக்க கள்ள கூட்டணி வைத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அமைச்சர்கள் கொள்ளை குறித்த விசாரனை செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றவர்கள் எடப்பாடி மீது எந்த விசாரனையும் செய்யப்படவில்லை. திமுக அரசு மத்திய அரசிடம் எந்த நிதியும் கேட்டு பெறமுடியாது. மத்திய அரசுடன் இணக்கமாக நிதியை பெற்று வர தேசிய ஜனநாயகூட்டணி ஆட்சி அமையவேண்டும். பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக்கப்பட்டு கூலிப்படையாக மாறி வருகின்றனர். இதனால் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 2026 தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இரட்டை இலை சின்னம் திமுகவுக்கு எதிராக எம் ஜி ஆர் உருவாக்கினார். அதனை 10 தோல்வி பழனிசாமி திமுக வெற்றிக்கு துணைபோகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் என்ன செய்தார். திமுக வெற்றிக்கு உதவினாரா? இல்லையா. இதே நிலைதான் தேனியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலே 3 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளேன். திமுக, அதிமுக வாக்காளர்களுக்கு 500, 1000 வழங்கினரர்கள். அம்மா ஆட்சி மலரவேண்டும் என்பதற்காகவே அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைய வேண்டும் என கூறிவருகிறோம். எடப்பாடி பழனிசாமியுடன் அமமுகவை இணைக்க முடியுமா? 2026-ல் அமமுக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் இவ்வாறு பேசினார். பொதுக்கூட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜே.ஆர்.பி.மணிகண்டன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பன்னீர்செல்வம். ஒன்றிய செயலாளர்கள் செல்வநாயகபுரம் முருகன், சேதுபதி, புளியங்குடி முத்துராமலிங்கம், சாயல்குடி பச்சைக்கன்னு முதுகுளத்தூர் நகரச் செயலாளர் சுந்தரராஜமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் மலைக் கண்ணன், உள்பட திரளானோர் மாவட்டம் முழுவதிலிருந்தும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.