மதுரை கோட்டத்தில் ரயில்வே வாரியம் உத்தரவின்படி
ரயில் நிலையங்கள் ரயில் பெட்டிகள் அலுவலகங்கள் பணிமனைகள் ஆகியவற்றில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அந்த வகையில் இரு வாரத் தூய்மை பிரச்சாரம் (சுவச்டா பக்வாடா) என்ற பெயரில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இரு வாரங்கள் நடைபெற உள்ளது. இந்த இரு வார பிரச்சாரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் நேரடி விவாதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு வினாடி வினா, கட்டுரைப் போட்டி ஓவிய போட்டி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி விளம்பர சுவரொட்டி தயாரிப்பது ஆகியவை நடைபெற இருக்கின்றன. தீவிர தூய்மை பணிகள் மற்றும் பிரச்சாரம் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் ரயில் பெட்டிகள் ரயில்வே அலுவலகங்கள் பணிமனைகள் பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றில் நடைபெற இருக்கிறது.
மேலும் இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதில்
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரது தன்னார்வ பங்களிப்புடன் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் பிரச்சாரங்கள் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நிறைவு பெறும் என்று மதுரை ரயில்வே அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.