நாகர்கோயில், மே – 21,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடர் மழையின் காரணமாக நாகர்கோவிலில் மையப் பகுதியான மணிமேடை சந்திப்பு பகுதியில் உள்ள போக்குவரத்து சமிக்கை ஒளிவிளக்கு கம்பம் சூறைக்காற்றில் சாலையில் விழுந்ததுஉடனடியாக போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து வந்து சாலையில் கிடந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர்.
எப்பொழுதும் பொதுமக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியான மணிமேடை சந்திப்பு பகுதியில் மழைக்காலம் என்பதால் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களும் அதிகம் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனவே மாவட்ட நிர்வாகம் மழைக்காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பழுதடைந்த மின் கம்பங்கள், மற்றும் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .