கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி இவரது மகன் வரதராஜபெருமாள் (28) இவர் ஓசூர் டாட்டா கம்பெனியில் வேலை செய்து வருகிறார் கடந்த 17ஆம் தேதி அகரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது திப்பம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வரதராஜ பெருமாள் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனையில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு தனது உறவினர்கள் வரதராஜபெருமாளின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதை அடுத்து வரதராஜ பெருமாள் உடல் இன்று பிரோத பரிசோதனைக்கு பின் தனது சொந்த ஊரான அகரம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கோட்டாட்சியர் ஷாஜகான் மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் வருவாய் ஆய்வாளர் உஷா, நாகரசம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் சங்கீதா, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள். அறிவொளி இராமமூர்த்தி, ரமேஷ்,மற்றும் ஊராட்சி செயலாளர் மெய்யப்பன், கிராம உதவியாளர் குமரேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics