அஞ்சுகிராமம் மே 24
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசற்குண மணி மகன் டோனிகிட் 33. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஐந்து மாத கற்பிணியாக இருக்கிறார். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் டெக்ரேசன் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் அவரது அண்ணன் சாம்ராய் கிட், நண்பர் டெரன்ஸ் மற்றும் அக்கா மகன் 8 வயது சிறுவன் ஆகியோருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத ஜெபின் மற்றும் டோனிகிட் ஆகியோர் அந்த மின்கம்பியில் சிக்கினர். இதில் ஜெபினை மீட்டு நாகர்கோயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் டோனிகிட் மீது மின்கம்பி சுற்றியதால் டிரான்பார்மை ஆப் செய்து அவரை மீட்டு அஞ்சு கிராமம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்ததனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.