வேலூர் ஜூன் 27 குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்துடன் வந்த வாலிபர் பள்ளத்தில் விழுந்து பலியானார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து சேத்து வண்டை கிராமத்தைச் சார்ந்தவர் முருகேசன் இவரது மகன் அஜித்குமார் வயது 27 இவருக்கு திருமணம் ஆகி சிவரஞ்சனி என்ற மனைவியும் 1.1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது அஜித்குமார் காட்பாடியில் உள்ள செல்போன் ஷோரூம் பணி செய்து வருகிறார் அதே போல் குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியை சேர்ந்த உதய் இருவரும் பணியாற்றி வருகிறார்கள் நேற்று முன்தினம் இரவு அஜித் குமாரும் உதய் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் உதயை அவரது கிராமத்தில் விடுவிற்காக ராமாலை கிராமத்திற்கு சென்று அவரை விட்டில் விட்டு விட்டு அஜித்குமார் அவர் வீட்டிற்கு சென்றார் அப்போது குடியாத்தத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் மேலாக புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக பல இடங்களில் மேம்பாலர்களும் சில இடங்களில் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு வருகிறது குடியாத்தம் சித்தூர் சாலை அரபி கல்லூரி அருகே மேம்பாலம் கட்டுவதற்கான பெரிய பில்லர் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டி கட்டுமானம் பணிகள் தொடங்கியும் நிலையில் இருந்த இந்த நிலையில் நண்பர் உதயை ராமாலையில் விட்டு வீட்டுக்கு வீடு திரும்பிய அஜித்குமார் இரவு சுமார் 11 மணி அளவில் புறவழிச்சாலை கட்டுமானம் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து உள்ளார் அப்போது பள்ளத்தில் கட்டுமான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கம்பிகளில் சிக்கினார் இதில் உடல் முழுவதும் கம்பிகள் குத்தி வலி தாங்க முடியாமல் அலறினால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கே அவரே பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உதவி ஆய்வாளர் பத்மநாபன் ஏட்டுக்கல் கேசவன் பார்த்திபன் உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர் இந்த நிலையில் அஜித்குமாரின் உறவினர்கள் சேத்து வண்டைகிராம பொதுமக்கள் குடியாத்தம் சித்தூர் சாலை அருகே புறவழிச்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறில் போராட்டம் குறித்து தகவல் அறிந்தும் விரிந்து வந்த நகர காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது