தஞ்சாவூர். மார்ச் 20
தஞ்சாவூர் அருகே விவசாய விளை நிலங்க ளுக்கு நடுவே தார் தயாரிப்பு கலவை ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர் அடுத்துள்ள ராமநாத புரம், சக்கர சமந்தம் பள்ளியேறி, வடகால் , மரவன பத்து, எட்டாம் நம்பர் கரம்பை , ரெட்டிப்பாளையம், களிமேடு, வெண்ணலோடை ஆகிய 10-க் மேற்பட்ட கிராம மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது- நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம் ராமநாதபுரம் கிராமத்தில் ஒருவர் தார் தயாரிப்புஆலை தொடங்கி நடத்தி வருகிறார். ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சுவாச பிரச்சனை கள், கண் எரிச்சல் போன்ற பல்வே று உடல் நல கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சக்கரசாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பினார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதற்கிடையே ராமநாதபுரம் வட்டம் சக்கரசாமந்தம் அருகே புதிதாக மற்றொரு தார் தயாரிப்பு ஆலை தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது முறையான அரசு அனுமதி உடன் தொடங்க உள்ளதாக அலட்சியமாக பதில் அளிக்கின் றனர். சக்கர சாமந்தம் வடகால் அருகே விவசாய விளைநிலங்களி ன் மத்தியில் ஏற்கனவே இயங்கி வரும் கலவை ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன மேலும் அந்த பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருவதால் அதற்கும் பாதிப்பு உண்டாகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலை வில் அமைந்திருக்கும் இந்த கலவை அலையால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகைக் கோவி லையும், அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று தர குறியீட்டை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. தூய்மை காற்று கொண்ட நகரம் என தஞ்சாவூருக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. இந்த நிலையில் இது போன்ற ஆலை நகரத்திற்கு மிக அருகில் அமைந்தால் இத்தகைய சிறப்பு நம்மை விட்டு செல்லும். எனவே நெல் உற்பத்தி யில் முக்கிய பங்கு வகிக்கும் எங்களின் விளைநிலங்களை காப்பாற்றும் பொருட்டு இரண்டு தார் தயாரிப்பு கலவை ஆலை களையும் இயங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டாளர் ஜீவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.