நாகர்கோவில் செப் 18
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் கல்வி, சமுதாய சீர்திருத்தங்கள் போன்றவற்றிற்காக அயராது உழைத்தவர் தந்தை பெரியார். முன்னேறிய சமுதாயத்தில் பிறந்திருந்தாலும் உயிர் மூச்சு பிரியும் வரை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக முழங்கியவர். ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர். திராவிடர் கழகத்தின் நிறுவனர். அவர் பிறந்த இந்நாள் சமூக நீதி நன்நாளாகும். இந்நாளில் நாம் அவரை நினைவு கூர்ந்து அவரது தியாகத்தையும், சமூக நீதிகாத்த தனிப்பெரும் கொள்கைகளையும் போற்றி புகழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன், மாநில நிர்வாகிகள் சிவசெல்வராஜன், நரசிங்கமூர்த்தி, ராஜன், சந்துரு, லதாசந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சேவியர் மனோகரன், சாந்தினிபகவதியப்பன், சுகுமாரன், மாவட்ட அணி செயலாளர்கள் அக்சயாகண்ணன், ராஜாராம், வைகுண்டமணி, ரபீக், சந்திரன், பாலமுருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்.சுந்தர்நாத், ராதாகிருஷ்ணன், தாமரை தினேஷ், வழக்கறிஞர் ராஜகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் அனிலாசுகுமாரன், சேகர், பகுதி கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன் மற்றும் ஜெபின்விசு, கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சகாயராஜ், மேரிபெல்சி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.