ஊட்டி. டிச. 19.
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் நடைப்பெற்ற SANTA CLAUS என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனியில் சிறப்பு பிராத்தனை
வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் கடந்த 1 மாத காலமாகவே கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் இரவு நேரங்களில் கிறிஸ்மஸ் தாத்தா கேரல்ஸ் பாடல்களை பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக SANTA CLAUS என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி இன்று உதகையில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிராத்தனை ஏறேடுக்கப்பட்டு பவனி நடைப்பெற்றது.
உதகை தாமஸ் ஆலயத்தில் துவங்கிய பவனி மத்திய பேரூந்து நிலையம், மணிகூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் வந்தடைந்தது. ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.