திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம், திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக
நம்பிக்கை வெற்றிக்கான முதல் படி என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு
நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்
முன்னிலை வகித்தார்.திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.K.திபேஷ் பட்டேல் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சேவை திட்டங்களின் மாவட்ட செயலாளரும் , மண்டலம் -5 திறன் மையத்தின்
RI மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn. ஷஷி போம்ரா கலந்து கொண்டு நம்பிக்கை வெற்றிக்கான முதல் படி
என்ற தலைப்பில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினர் Rtn. ஷஷி போம்ரா அவர்களை கௌரவிக்கும் விதமாக
மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் Rtn.
M.செல்வகனி,திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.S.விக்னேஷ்,திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.S.பார்கவி சந்தோஷ் உட்பட ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் குயின் சிட்டி ரோட்டரி
சங்கத்தின் தலைவர் Rtn.S.கவிதா செந்தில்குமார் நன்றி கூறினார்.