சுசீந்திரம்.ஜன.30
சுசீந்திரம் தாணூமாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் தை அம்மாவாசையை முன்னிட்டு வாகன பவனி நடைபெறும் அதுபோல நேற்று தை அம்மாவாசை என்பதால் தாணுமாலய சுவாமி கோவிலில் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் ஸ்ரீ பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து மாலை இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் பெருமாளும் ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் திருக்கண் சாத்தி மக்கள் வழிபட்டனர் பின்பு சுவாமி விக்கிரகங்கள் தாணுமாலையா சுவாமி கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாதணை நடைபெற்றது இதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்