கீரிப்பாறை நவ 26
கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில்கூட தொழிலாளர்கள் இ எஸ் ஐ மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் கூடத்தில் பணி புரியும் தொழிலாளிகள் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு திட்டமான தொழிலாளர் காப்பீடு திட்டமான இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அரசு ரப்பர் கழகத்தில் பணி புரியும் தொழிலாளிகளுக்கு வழங்கிட கேட்டு நீண்ட நாள் கோரிக்கையாக வைத்த பிறகும் தொழிலாளிகள் நலனில் அக்கறை காட்டாமல், இ எஸ் ஐ எனும் மருத்துவ திட்டத்தை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி 25/ 11 /2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தராவிட்டால் 26 ஆம் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தினந்தோறும் இரண்டு பேர் வீதம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூட தொழிலாளர் தெரிவித்தனர்.