ராமநாதபுரம், ஜுன் 18-
இயந்திர மயமான உலகில் தற்போது 90 சதவீதம் பேருக்கு கை கால் முதுகு இடுப்பு பிடரி மூட்டு வலிகள் ஏற்பட்டு வலி நிவாரணிகளை தேடி அலைகின்றனர். இதில் பெண்கள் தான் அதிகமாக வலி நிவாரணம் தேடுகின்றனர். இதற்கு எளிமையான பரிகாரம் குறித்து பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து விளக்கம் அளித்து உள்ளார்.
இராமநாதபுரம் பட்டணம்காத்தான் சுகம் ஆயுர்வேத வைத்தியசாலை பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து மூட்டு வலியை உணவு முறையில் நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள பெண்களும் பெரும்பாலான ஆண்களும் குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்கும் நிலை இல்லை. எல்லாமே இயந்திர மயம் ஆனதால் உடலுக்கு கொடுக்க வேண்டிய பணிகளை கொடுக்காமல் அதிகமான ஓய்வு கொடுப்பதால் கை கால் முதுகு இடுப்பு கழுத்து பிடரி ஆகியவற்றிலும் மூட்டுகளிலும் வலி ஏற்பட்டு வலி நிவாரணிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிகமாக மூட்டு வலிக்காக பெண்களே வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மூட்டுவலியும் முதுகுவலியும் பெண்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. மாதந்தோறும் ஏற்படும் மாத விலக்கினாலும், பிரசவத்தினாலும் அதிக உதிரப்போக்கினாலும் எலும்புகளில் உள்ள கால்சியம் குறைந்து எலும்பில் தேய்மானம் ஏற்பட்டு வலியால் வேதனை அடைந்து வருவார்கள். இவர்களுக்கு எளிமையான ஒரு மருந்து என்னவென்றால்,
பொதுவாக இதுபோன்ற கால்சியம் குறைபாட்டுக்கு முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சாப்பிட சொல்வார்கள். வசதி உடையவர்கள் சாப்பிட முடியும். ஆனால் ஏழைகளால் முடியாது. அதுவும் இல்லாமல் மேற்கண்ட பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்.இதற்கு எளிமையான தீர்வு.
நிலக்கடலையை தினமும் ஒரு கைப்பிடியளவு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். எல்லா வலியும் நீங்கி கால்சியத்தை அதிகாமாக்கி எலும்பையும் வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
நிலக்கடலையை சட்டியில் போட்டு நன்றாக வறுத்து , தோல் நீக்கி அத்துடன் நாட்டு சர்க்கரையையும் சிறிது ஏலக்காயயும் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டு,அதனை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வர அனைத்து வலிகளுக்கும் குட்பை சொல்லி விடலாம்.
இது குழந்தைகளுக்கும் சிறந்த ஊட்டச்சத்து உணவு. அவர்களின் எலும்பில் அதிகமான கால்சியம் சேர இந்த உணவுப்பொருளை அதிகமாக கொடுத்து வாருங்கள்.
மேலும் தகவல் பெற வேண்டும் என்று விரும்பினால் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் உள்ள சுகம் ஆயுர்வேத வைத்தியசாலையில் 94420 45435 என்ற எண்ணில் முன்பதிவு செய்து நேரில் வந்து முழுமையான ஆலோசனை பெற்று உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறினார்.